
நாவலப்பிட்டி பகுதியில் நேற்று (03) பிற்பகல் பெய்த பலத்த மழையினால் கினிகத்தேனை – நாவலப்பிட்டி பிரதான வீதியின் அம்பகமுவை பகுதியில் அம்பகமுவ ஓயா வான்பாய்ந்ததால் அவ்வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியது.
அச்சமயத்தில் கினிகத்தேனையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று பயணிகளுடன் வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த போது,
அம்பகமுவை பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவினர் நிலவிய ஆபத்தையும் பொருட்படுத்தாது மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவர்கள் லொறி ஒன்றை பேருந்துக்கு அருகில் கொண்டு சென்று பேருந்திலிருந்த மக்களை மீட்டதுடன், பின்னர் கெப் ரக வாகனம் ஒன்றின் உதவியுடன் பேருந்தையும் மீட்டெடுத்தனர்.





