பாடசாலை விடுமுறைகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!!

272

2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறைகள் தொடர்பான அறிவிப்பொன்றை கல்வி அமைச்சு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் கல்வியாண்டின் முதல் கட்டம் நாளை (07) நிறைவடையும். முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் கல்வியாண்டின் முதல் கட்டம் செப்டெம்பர் (2) ஆம் திகதி நிறைவடையும்.

அனைத்து பாடசாலைகளுக்குமான மூன்றாவது கல்வியாண்டின் இரண்டாம் கட்டம், செப்டெம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமை அன்று தொடங்குவதாகவும், மூன்றாவது கல்வியாண்டு டிசம்பர் 4ஆம் திகதி அன்று நிறைவடைவதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 05 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.