உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த பாடசாலை மாணவன் கைது!!

606

கண்டி – கன்னொருவ பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையின் மாணவர் ஒருவர் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பேராதெனிய, கன்னொருவ பகுதியில் கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொலிஸ் அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இதன்போது மாணவரிடமிருந்து 500 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 900 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றை பொலிஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அடுத்த ஆண்டு உயர்தர பரீட்சை எழுதவிருந்த 18 வயதான மாணவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.