யாழ். பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கதி : சோகத்தில் குடும்பத்தினர்!!

130

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் பயிலும் மாணவியொருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் (06.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த மாணவி, யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் பயிலும் நிரோஷினி என்றும் அவருக்கு தற்போது 27 வயது என்றும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணவி வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவமானது அனைவர் மத்தியிலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கற்ற சமூகத்தின் தொடர்ச்சியான இழப்புகள் பாரிய இழப்புகளாகவே பார்க்கப்படுகின்றது.