
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம் மற்றும் தூய்மையான தேசத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘அத்தம’ (Attama) தேசிய தூய்மை தினத் திட்டம் இன்று (08.08.2026) வவுனியா நகரத்தை மையமாகக் கொண்டு சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர ஆகியோர் தலைமையில் இத்தூய்மைப்பணி உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) மற்றும் ‘பிரஜா சக்தி’ ஆகிய திட்டங்களின் உறுப்பினர்களின் முழுமையான ஒத்துழைப்புடன், இராணுவத்தினர் மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இத்திட்டத்தை ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இந்நிகழ்வில் முப்படையினர், சிவில் பாதுகாப்புப் படையினர், பொலிஸார், அரச அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டு தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.







