சிறுமி ஒருவரை அனாதரவாக வீதியில் விட்டு சென்ற முச்சக்கர வண்டி!!

258

கண்டி – வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் இன்று காலை (13) சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்டுள்ள நிலையில் வத்தேகம பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பத்து வயதிற்கு உட்பட்ட குறித்த சிறுமி தனது பெயர் ஆயிஷா எனவும் தனது தந்தையின் பெயர் ராசிக் எனவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் , சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக வத்தேகம பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பெற்றோரே இவரைக் கைவிட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான விசேட தேடுதல் வேட்டையைச் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், அச்சிறுமியின் உடலில் தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கான காயங்கள் மற்றும் அடையாளங்கள் காணப்படுவதால், இது குறித்த விரிவான மருத்துவ அறிக்கையைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது