மட்டக்களப்பில் பெண் அரச ஊழியரின் திடீர் உயிரிழப்பால் சோகம்!!

129

மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயார் (41) உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் (11.08.2026) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பப் பெண் கடந்த மாதம் விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் விவசாய பிரிவுக்கான அபிவிருத்தி உத்தியோத்தராக கடமையாற்றும் இவர் தனது கடமையை சிறப்பாக ஆற்றி வந்ததுடன் சக உத்தியோகத்தர்களுடனும் புரிந்துணர்வுடன் கடமையாற்றி வந்துள்ளார்.

இவரது இழப்பு சக உத்தியோகத்தர்களிடையேயும் குடும்பத்தாரிடையேயும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது