
வவுனியா வெங்கலசெட்டிக்குளம் பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கும் சிறப்புத் திட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபையின் செயலாளர் ஆகியோரின் இணைத் தலைமையில் இனிதே ஆரம்பமானது. இதில் உப தவிசாளர், சபையின் ஏனைய சபை உறுப்பினர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் கர்ப்பிணித் தாய்மார்களும், நேரடியாக வருகை தர முடியாத தாய்மார்களின் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டு போசாக்கு உணவுப் பொதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

கர்ப்பிணித் தாய்மார்களின் ஆரோக்கியத்தையும், பிறக்கவுள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்தையும் உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






