மின்வெட்டு தொடர்பில் பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கியுள்ள செய்தி!!

58

அடுத்த ஆண்டுக்குத் தேவையான நிலக்கரியைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும் நாட்டில் மின்வெட்டு இடம்பெறாது என்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து புதிய நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் கூறும் இதுபோன்ற அறிக்கைகளால் பொதுமக்கள் தேவையற்ற முறையில் பீதியடைய வேண்டாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டு காற்றாலைகள் மூலம் 400 கிலோவாட் மின் உற்பத்தித்திறன் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டின் மின்சார தேவையில் 48% புனல்மின் உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுவதாகவும், மின் உற்பத்திப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு மின்வெட்டு ஏற்படாது என்றும் அமைச்சர் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.