
உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் 27வது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதன் பொருட்டு தமிழகத்தின் கோயம்பேட்டில் உள்ள தனியார் கட்டிடத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்காக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், இயக்குனர் கவுதமன், சட்டக் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் சென்றனர்.
எனினும் முன்னதாக இதற்கு பொலிசார் அனுமதியளிக்கவில்லை எனவும் உண்ணாவிரதம் இருக்க தடைவிதித்தாகவும் தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் உண்ணாவிரதம் இருக்கச் சென்றவர்களை பொலிசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கோயம்பேட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்தனர்.
மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவும் கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கையால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பொலிசார் குவிக்கப்பட்டனர்.





