முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி விபத்தில் மரணம்!!

146

முன்னாள் அமைச்சரும் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி உயிரிழந்துள்ளார். திடீர் விபத்து ஒன்றில் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தேசானி குணரத்ன என்ற 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர்களுக்கு சொந்தமான புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர் காரப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் தணமல்வில பகுதியில் உள்ள அவர்களின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.