ஐ.பி.எல் தொடக்க விழாவில் ஆபாச நடனம் ஆடிய வழக்கு தள்ளுபடி!!

589

Dance

ஐ.பி.எல் தொடக்க விழாவில் ஆபாச நடனம் ஆடியதாக பொலிவுட் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ஜெபக்குமார் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது,

5வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா சென்னையில் கடந்த 2012, மார்ச் மாதம் நடைபெற்றது. அதில் பொலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான், நடிகைகள் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிங்கர் ஆகியோர் ஆபாசமாக நடனமாடினர்.

அதனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கிரிக்கெட் சபை நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இந்த மனு, நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அதை விசாரித்த அவர், இந்த புகார் தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை பொலிசார் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எனவே, இந்த மனுவில் வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.