நீண்டநாள் தோழியை கரம்பிடித்த இந்திய வீரர் ரஹானே!!

430

Rahane

இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசை வீரராக உள்ள ரஹானே தனது நீண்டநாள் தோழியான ராதிகாவை மணந்தார்.

சமீபத்தில் இங்கிலாந்து தொடரில் அசத்திய ரஹானே சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். இதைத் தொடர்ந்து அவரது தோழி ராதிகாவுடன், ரஹானேவுக்கு பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தனது தோழியான ராதிகாவை மணந்தார். கிரிக்கெட் வீரராக இருக்கும் ரஹானே ஒரு கராத்தே வீரராக பிளக் பெல்ட் வாங்கியவராம்.

அதாவது அவருடைய கூச்ச உணர்வை போக்க அவரது அப்பா கராத்தே வகுப்புகளுக்கு அவரை அனுப்புவாராம்.