வவுனியாவில் அரச திணைக்கள பொறியியலாளர் 3.5 கோடி ரூபாய் காசோலை மோசடி வழக்கில் கைது!!

545

வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் சுமார் 3.5 கோடி (35 மில்லியன்) ரூபாய் காசோலை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அரச திணைக்களம் ஒன்றில் கடமையாற்றும் பொறியியலாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (20.08.2026) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கினை விசாரணை செய்த நீதிபதி, சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.