தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளிக்கபடவுள்ளது.
கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு, பெங்களூரின் அக்ரஹாரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவி தலைமையில் தீர்பு வழங்கப்படவுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி ஆகியோரும் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் பெங்களூர்-தமிழ்நாடு இடையே உள்ள பேருந்து சேவை நிறுத்தப்பட்டதுடன், சுமார் 6 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.





