வவுனியாவில் மாபெரும் ஓவியக் கண்காட்சியும் விற்பனையும்!!

133

வவுனியாவில் மாணவர்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் Kids Creative Art Centre ஏற்பாடு செய்துள்ள மாபெரும் ஓவியக் கண்காட்சியும் விற்பனையும் நடைபெறவுள்ளது.

இக் கண்காட்சி இம் மாதம் 26ஆம் திகதி புதன்கிழமை (26.08.2026) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை, சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில்(YMHA Hall) நடைபெறவுள்ளது.

மாணவர்களின் ஓவியத் திறமைகள் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் இந்த நிகழ்வில் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறுவர்களின் கலைப் படைப்புகளை பார்வையிடுவதுடன் மாணவர்களின் ஓவியங்களையும் கொள்வனவு செய்ய முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைவரும் வருக… அனுமதி இலவசம்!