இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்!!

235

இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (24.08.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (22.08.2026) 24 கரட் தங்க பவுண் ஒன்று 384,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று அதன் விலை 2000 ரூபா அதிகரித்து 386,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.