
3400 Lipstick Covered Car police fined Gwalior man: வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலி செய்த செயல் காதலனுக்கு தலைவலியாக போய் முடிந்துள்ளது.
குவாலியரில் காதலனுக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலனின் காரில் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்களை காதலி வரைந்த நிலையில் போக்குவரத்து அதிகாரிகள் காரின் உரிமையாளருக்கு ரூ 5.500 அபராதமாக விதித்துள்ளனர்.
அத்துடன் காரில் உள்ள மொத்த லிப்ஸ்டிக் முத்தங்களையும் சுத்தப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக நகரின் முக்கிய வீதிகளில் இந்த கார் சுற்றித் திரிந்த நிலையில், இந்த கார் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்கள் வேகமாக பரவியது.
இந்நிலையில் சிட்டி சென்டர் பகுதியில் இந்த கார் செல்வதை கவனித்த போக்குவரத்து அதிகாரிகள், காரையும், காரின் உரிமையாளரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அவர் மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளை மீறியதாக கூறி ரூ.5500 அபராதமாக விதித்துள்ளனர். அத்துடன் காரில் இருக்கும் முத்தக் கரைகளை முழுமையாக சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காரின் உரிமையாளர் ஆதித்யா, வெளிநாட்டு ட்ரெண்டால் கவரப்பட்ட தன்னுடைய காதலி இந்த முத்த அலங்காரத்தை செய்ததாக குறிப்பிட்டார்.
பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு பிறகு சுமார் மூன்றரை மணி நேரம் போராடி காரில் இருந்த ,400 லிப்ஸ்டிக் முத்தங்களையும் சுத்தம் செய்துள்ளார்.





