வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவன் 195 புள்ளிகளைப் பெற்று வடமாகாணத்தில் முதலிடம்!!

698

நேற்றிரவு வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவன் தயானந்தரூபன் அபினேஸ் 195 புள்ளிகளைப் பெற்று வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்று இன்று வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவன் தயானந்தரூபன் அபினேஸ் 195 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதுடன் வடமாகாணத்திலும் அதிகூடிய புள்ளி பெற்ற மாணவனாக பதிவாகியுள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் முரளி சாகித்தியன் 193 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் நிலையையும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி தவப்பிரகாஸ் அக்சிகா 191 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளார்.

195 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட தயானந்தரூபன் அபினேஸ் என்ற மாணவனை இன்று காலை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

தயானந்தரூபன் அபினேஸ்

1

தவப்பிரகாஸ் அக்சிகா

2 4 5