புதையலுக்காக குழந்தையை கடத்திய கும்பல் : அடர்ந்த காட்டில் மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!!

193

மாத்தறை – தெலிஜ்ஜவில பகுதியில் புதையல் தோண்டும் நோக்கத்தில் 9 வயது குழந்தையை நான்கு பேர் கொண்ட கும்பலொன்று கடத்திச்சென்றுள்ளது. இதன்போது குழந்தையை கடத்தி கண்களையும், வாயையும் துணி நாடாவினால் கட்டப்பட்டு, வீட்டிற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டிற்குள் கொண்டுசென்றுள்ளனர்.

குழந்தையின் அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் அவர்களை துரத்திச்சென்று, பொலிஸாரின் உதவியுடன் சந்தேகநபர்களை மடக்கிபிடித்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் மாத்தறை பிரதான நீதிபதி முன் முன்னிலைபடுத்திய போது 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில், ஒரு முச்சக்கர வண்டி சாரதி அவரது நண்பர் மற்றும் இருவர் உள்ளடங்கியுள்ளனர். இந்நிலையில், நான்கு பேரையும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.