கணவனின் கொடூர செயல் : கர்ப்பிணிப்பெண் குத்திக் கொலை!!

32

புத்தளம் கல்பிட்டி, எஸ்.பி.ஆர்.வத்தை, தலவில பகுதியில் கணவனின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான கர்ப்பிணி பெண்ணும் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் அவசர தொலைபேசி சேவையான 119 இற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், உடனடியாக செயற்பட்ட கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

45 நிமிடங்களுக்குள் துரத்திச்சென்று சந்தேகநபரையும் குற்றத்திற்கு பயன்படுத்திய கத்தியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் களாப்பள்ளி, தலவில முகவரியை சேர்ந்ததிலினி தில்ருக்ஷி என்ற 26 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.