கடற்றொழிலுக்கு சென்ற தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!!

27

மட்டக்களப்பு-கிரான்குளம் கடலில் கடற்றொழிலிலுக்காக சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று (04.09.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய கடற்றொழில் சங்க தலைவர் மற்றும் விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் இருவருமே உயிரிழந்துள்ளனர்.

குறித்த கடல் பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று பிற்பகல் 11.00 மணியளவில் மீன் பிடிப்பதற்கு தோணி ஒன்றில் 3 பேர் சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென பாரிய அலை ஒன்றில் தோணி சிக்கி கவிழ்ந்ததையடுத்து 3 பேரும் நீரில் மூழ்கினர்.

இதில் ஒருவர் நீந்தி கரையை வந்தடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இரு கடற்றொழிலாளரின் சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.