விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!!

95

விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயது இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு – துணுக்காய் பகுதியில் கடந்த 04.09.2026 அன்று சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது எதிரே அதி வேகமாக வந்த முச்சக்கரவண்டி மோதியதில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (06.09.2026) உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த அவர் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரது மரணம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.