தனிநபராக நதியை சுத்தப்படுத்திய 20 வயது இளைஞன் : வேலை வழங்கும் நெதர்லாந்து நிறுவனம்!!

21

netherland firm job offer to bittu tabahi who cleaned river மத்தியப் பிரதேசத்தில், தனிநபராக நதியை சுத்தப்படுத்திய 20 வயது இளைஞருக்கு நெதர்லாந்தை சேர்ந்த நிறுவனம் வேலை வழங்க முன்வந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோராவைச் சேர்ந்த 20 வயது இளைஞரான பி.எஸ்சி மாணவர் சுரேந்திர சிங், சமூக ஊடகங்களில் பிட்டு தபாஹி(bittu tabahi) என்று அறியப்படுகிறார்.

இவர் அந்த பகுதியில் கடுமையாக மாசுபட்டிருந்த அஜ்நார் நதியை(Ajnar River) சுத்தம் செய்யும் முயற்சியில் தனிநபராக இறங்கியுள்ளார். தன்னுடைய சேமிப்பு ரூ.30,000 பயன்படுத்தி, சில மாதங்களாகவே நதியை சுத்தப்படுத்தி வந்துள்ளார்.

அவர் சுத்தம் செய்யும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, பலரும் அவர் பிரபலமாகவே இதனை செய்து வருவதாக விமர்சித்தனர். ஆனால், அவர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல், நதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி தொடர்ச்சியாக தூய்மை பணியில் ஈடுபட்டு நதியை சுத்தமாக மாற்றியுள்ளார்.

பிட்டு தபாஹியின் இந்த முயற்சிக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், பிட்டு தபாஹியை தனது வீட்டிற்கு அழைத்து “உன்னால் இந்த மாநிலமே பெருமை கொள்கிறது” என பாராட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, நெதர்லாந்தை சேர்ந்த The Ocean Cleanup என்ற நிறுவனம் அவரை அவருக்கு வேலை வழங்க முன்வந்துள்ளது.

இந்த நிறுவனம், 2040 ஆம் ஆண்டுக்குள் கடலில் மிதக்கும் 90% பிளாஸ்டிக்கை அகற்றுவதை நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் நிறுவனரான Boyan Slat, எங்களுடன் வந்து பணியாற்றுங்கள் என பிட்டு தபாஹிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.