தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தெரிவு : நாளை பதவியேற்பு!!

718

OP

தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால், தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தெரிவு செய்யும் விதமாக அ.தி.மு.கவினர் இன்று சென்னையில் மாலை கூடி ஆலோசித்தனர்.

முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தெரிவு செய்யப்பட்டதாக அ.தி.மு.கவின் நெருங்கிய வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் மாலை 6 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தமிழக ஆளுனர் ரோசய்யாவை சந்திக்க செல்லவுள்ளார்.

பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் மாதம் வரை தமிழக முதல்வராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.