ஏ9 வீதியில் வீதியை விட்டு விலகி கார் விபத்து!!

135

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியில் காரொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (09.09.2026) இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது கார் தலைகீழாகக் கவிழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஏ9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் முன்னரும் பல விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.