
கிளிநொச்சி – ஏ9 வீதியின் விழாவோடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (10-09-2026) பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
கிளிநொச்சி இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காரும், உமையாள்புரம் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிளும் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் அவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





