
பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (10.09.2026) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மெதிரிகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த தனியார் பேருந்து ஒன்றே வீதியை விட்டு விலகி கால்வாயொன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்து கவிழ்ந்ததில் காயமடைந்த 22 பேர் ஹபரணை மற்றும் ஹிங்குராங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.





