30 ரூபாயால் பறிபோன 750,000 ரூபாய் : தமிழர் பகுதியில் சம்பவம்!!

19

அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர்ப் போத்தல்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மட்டக்களப்பு வாழைச்சேனை உணவகம் ஒன்றுக்கு 750,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட உணவக உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் 750,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகளால் கடந்த ஜூன் 4ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இந்த அத்துமீறல் கண்டறியப்பட்டது. இதன்போது அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாயாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு லிட்டர் குடிநீர்ப் போத்தலை, உணவகத்தில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது.