திருமதி அழகிப் போட்டியில் புஷ்பிக்காவின் கிரீடத்தை பறித்தவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!

16

திருமதி அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றின் போது, புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தை பலவந்தமாக அகற்றி, அவரைத் தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திர ஆகிய பிரதிவாதிகளை குற்றமற்றவர்களென கருதி விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பிட்ட போட்டியானது கொழும்பு நெலும் பொக்குண திரையரங்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருந்தது. நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

தீர்ப்பை அறிவித்த மேலதிக நீதவான், பிரதிவாதிகளுக்கு எதிராக முறைப்பாட்டாளரால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்க முறைப்பாட்டாளர் தரப்பு தவறிவிட்டதாகக் குறிப்பிட்டார். அத்துடன், பிரதிவாதியான சூலா பத்மேந்திர தற்போது உயிரிழந்துவிட்டதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.