இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை : 100 மி.மீ.க்கும் மேல் மழை பெய்யும்!!

174

மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், மழையுடன் கூடிய காலநிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.