இலங்கையில் மீண்டும் மோசமடையும் வானிலை : பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!!

219

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (15) காலை 10.00 மணிக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (16) காலை 10.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, புளத்சிங்ஹல, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகள்

கேகாலை மாவட்டத்தின் வரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இந்த அறிவித்தல் பொருந்தும் என அறிவித்துள்ளது.