வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் அகில இலங்கை தமிழ் தின நாட்டார் பாடல் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம்!!

126

அகில இலங்கை தமிழ் தினப் போட்டி – 2026 இன் கீழ், கொழும்பு இந்துக் கல்லூரியில் நேற்று முன்தினம் (19.09.2026) நடைபெற்ற திறந்த பிரிவு நாட்டார் பாடல் போட்டியில், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அணி தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது தடவையாக தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளமை பாடசாலைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. இவ்வெற்றியைப் பெற்றுக்கொண்ட பாடசாலை அணிக்கு பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மாணவர்களைப் பயிற்றுவித்து இச்சாதனைக்கு பங்களிப்பு வழங்கிய ஆசிரியர்கள், குறிப்பாக திரு.கமலதாஸ் ஆசிரியர், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், அணியின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய மகாவித்தியன் திரு.லுமின்தனுக்கும் பாடசாலை சார்பில் விசேட நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.