
சவூதி அரேபியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் இன்று (21) ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக அவர்கள் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து உரையாடியிருந்தனர்.
இந்நிலையில், சவூதி தூதுவராலயத்திற்கு சென்ற நிலையில் அங்கே கடிதம் கையளிப்பது பின்போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நேரத்தில் ஜனாதிபதியை சந்திப்பதற்கான அழைப்பு வந்ததாகவும் ஒரு மணியளவில் ஜனாதிபதியை குடும்ப உறுப்பினர்கள் சந்தித்து உரையாடியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதன்போது, அனோஜனின் விடுதலைக்காக முழுமையான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை நல்குவதாக ஜனாதிபதி அநுர குமா திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.





