
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் வீதியில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த தபேந்திரன் தினுசன் (வயது 26) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இளைஞன் மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது போக்குவரத்துப் பொலிஸார் அவரை வழிமறித்தனர்.
இதன்போது, அந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய பின்னர் தானாகவே கீழே சரிந்து விழுந்து அசைவற்று காணப்பட்டுள்ளார்.
முறைப்படி அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.





