வீடொன்றை அதிரடியாக முற்றுகையிட்ட பொலிசார் : இளம் தம்பதி கைது!!

32

மாத்தறை, வல்கம பகுதியில் 21 கிலோ 810 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை, மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், அதிகாரிகளின் குழுவொன்று வீடொன்றில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் உழைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 லட்சம் ரூபாய் பணமும், கைப்பற்றப்பட்டுள்ளது.

வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் 3 கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 34 வயதுடைய பெண் வஞ்சாவல பகுதியைச் சேர்ந்தவர் எனவும் 28 வயதுடைய ஆண் யக்கலமுல்ல பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மாத்தறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.