வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் ஒருவர் கைது!!

44

வவுனியாவில் 5 கிலோ அம்பர்கிரிஸ் எனும் திமிங்கலத்தின் வாந்தியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, குறித்த பகுதியில் சுமார் 5 கிலோகிராம் எடையுள்ள அம்பர்கிரிஸ் (திமிங்கலத்தின் வாந்தி) கைப்பற்றப்பட்டிருப்பதுடன், அதனை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் அனுராதபுரத்தைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சந்தேகநபரும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அம்பர்கிரிஸும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே. எஸ். ரத்னமலலா தலைமையிலான குழுவினரால் மேற்கொண்டு வருகின்றது.