தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்!!

574

panneerselvam

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக இன்று கண்ணீர் மல்க பதவியேற்றுக் கொண்டார்.

ஆளுநர் மாளிகையில் பிற்பகலில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசையா, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர் செல்வத்துடன் மற்ற அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.

இந்த பதவியேற்பு விழாவில் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த 2001ஆம் ஆண்டு செம்படம்பர் முதல் 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.