வவுனியாவில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையின் காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடும் வெப்பம் நிலவி வந்த வவுனியா மாவட்டத்தில் தற்போது பெய்து வருகின்ற மழை காரணமாக மக்கள் ஓரளவுக்கேனும் இந்த வெப்பத்தின் கொடுமையிலிருந்து விடுபடத் தொடங்கி இருக்கிறார்கள்.
மேலும் சிலதினங்களுக்கு இந்த வானிலையை பொதுமக்கள் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கின்றனர். கடுமையான் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் மழை நீரை சேமித்தது கொண்டமையும் குறிப்பிடத்தக்கது .
-கஜேந்திரன்-






