கிளிநொச்சியில் டிப்பர் வாகனம் மோதி விபத்து – சாரதி படுகாயம்!!

113

கிளிநொச்சி – ஏ9 வீதி இரணைமடு சிவன் கோயில் சந்தியில் டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று(30.09.2026) காலை 7 .30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இரணைமடு சிவன் கோயில் சந்தியில் டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.