மணக்கோலத்தில் மாட்டு வண்டியில் யாழ்ப்பாணத்தை வலம் வந்த புதுமணத் தம்பதி!!

28

யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் வெளிநாட்டு பிரஜையொருவர் ஈழத்து பெண்ணை திருமணம் செய்து மாட்டு வண்டியில் அழைத்து வந்த காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவரை, வெளிநாட்டவர் ஒருவர் திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர், தம்பதிகள் இருவரும் தமிழர்களின் கலாசார உடையில், மாட்டு வண்டியில் அப்பகுதியில் வலம் வந்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரவலாக பேசப்பட்டுள்ளதுடன், இவர்களின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.