காணிக்காக பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர் : அதிரடியாக 7 பேர் கைது!!

121

அனுராதபுரம் – இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று(07.10.2026) புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராஜங்கனை – சாலியபுர பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 51 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
7 பேர் கைது.

உயிரிழந்தவருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையே வயல் காணி தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வந்த தகராறே இந்தக் கொலைக்குக் காரணமாகும் என்பது முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் 20 முதல் 55 வயதுக்குட்பட்ட 6 ஆண்களும் ஒரு பெண்ணும் உட்பட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து இராஜங்கனைப் பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.