
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த பகுதி இன்று (13.10.2026) உருவாகலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இநதன் தாக்கத்தால், இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டைச் சுற்றியுள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100-150 மிமீ வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ-க்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.





