
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். யாழ். கைதடி பகுதியில் இன்று (13.10.2026) மோட்டார் சைக்கிளும் கனரக வாகனமும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களுமே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புன்னாலைக்கட்டுவன் தெற்கை சேர்ந்த நிசாந்தன் நிதர்சன் (வயது 23) மற்றும் கமலேந்திரன் கஜந்தன் (வயது 20) ஆகிய இரண்டு இளைஞர்களே உயிரிழந்தவர்களாவர்.

விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களும் தமது தொலைபேசியில் காணொளி பதிவு செய்தவாறு மிக வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்று வேக கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






