
இலங்கை அணியின் ஒரே நோக்கம் உலகக்கிண்ணப் போட்டிகளில் தான் உள்ளது என அணியின் பயிற்சியாளர் அட்டப்பட்டு கூறியுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த போல் பார்பிராஸ் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அந்த பதவியில் இருந்து அவர் விலகினார்.
இதனையடுத்து இலங்கை அணியின் முழு தலைமை நேர பயிற்சியாளராக மார்வன் அத்தபத்து நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எங்கள் வீரர்கள் மத்தியில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. தற்போது எங்களின் பார்வை எல்லாம் உலகக்கிண்ணப் போட்டிகளை பற்றி தான் உள்ளது.
எங்களது குறிக்கோள் எப்போது உயர்ந்ததாகவே இருக்கும். இலங்கை அணி கடந்த 6 மாதமாக சிறந்த ஆட்டத்தை ஆடி வருகிறது. கண்டிப்பாக வெற்றிகளை தக்க வைத்துக் கொள்வதில் எனக்கு சவாலான பணி காத்திருக்கிறது.
அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் புதிய முறைகளை கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக உள்ளனர். உலகின் சிறந்த துடுப்பாட்டக்காரராக உள்ள சங்கக்காரவும் ஆட்டத்தில் இருந்து புதிய உக்திகளை கற்றுக் கொள்ளும் திறமை படைத்தவர்.
முக்கியமான சவால் இப்போது இருக்கும் இந்த வெற்றி அணியை கடைசி வரை இதே போல் கொண்டு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
தற்போது அணியின் பயிற்சியாளராக உள்ள மார்வன் அத்தபத்து, 1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் வென்ற இலங்கை அணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





