தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு நகைபிரியர்கள் கவலை!!

139

2026 ஒக்டோபர் 16ஆம் திகதியான இன்று, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச தகவல்காள் தெரிவிக்கின்றன. இதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,173.56 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

நேற்றுடன் ஒப்பிடுகையில் இது 24.62 அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் விலை விபரங்களின்படி, இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 372,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 342,200 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.