சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கான தகவல்!!

26

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (16.10.2026) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4173.56 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

நேற்றுடன் ஒப்பிடுகையில் இது 24.62 அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் விலை விபரங்களின்படி, இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலையும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 372,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 342,200 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.