தமன்னாவின் படம் தோல்வியால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர் தற்கொலை முயற்சி!!

496

Tamanna

தமன்னா தெலுங்கு இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவருக்கு படங்கள் இல்லை. கடைசியாக வீரம் படத்தில் நடித்தார். தமன்னா தெலுங்கில் நடித்த ஆகடு படம் சமீபத்தில் ரிலீசானது. இதில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்து இருந்தார்.

இந்த படம் வெற்றிகரமாக ஓடியதாகவும் கோடிக்கணக்கில் வசூல் ஈட்டியதாகவும் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விநியோகஸ்தர்கள் இதை மறுத்துள்ளனர். படம் தோல்வி அடைந்ததாகவும் நிறைய வசூல் ஈட்டியதாக போலி கணக்கு வெளியிடப்படுகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நெல்லூர் பகுதியில் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவான தொகையே வசூலானதாம். இதனால் அந்த பகுதி விநியோகஸ்தர் அதிர்ச்சி அடைந்ததாகவும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது