கணவர் வீட்டிற்கு 3 மணி நேரம் நடந்து சென்ற புதுமணப்பெண் : காரணம் இதுதான்!!

30

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் புல்ஹார் என்ற கிராமத்தில் கடந்த 20 ஆம் திகதி ஷர்மிளா என்ற இளம்பெண்ணுக்கு அனில் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர் தனது திருமணத்திற்கு பிறகு கணவர் வீடு அமைந்துள்ள உண்டாவா என்ற கிராமத்திற்கு உறவினர்களுடன் சென்றபோது வழித்தடம் சரியான வீதி வசதி இல்லாமல் கரடு முரடாக இருந்தது.

இதன் காரணமாக மணப்பெண் மற்றும் உறவினர்கள் சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கிராமத்திற்கு நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டது. அப்போது அவர்கள் தங்கள் கிராமத்தில் இருந்து உண்டாவா கிராமத்திற்கு சுமார் இரண்டரை மணி நேரம் நடந்து சென்றனர்.

இதையடுத்து சரியான வீதி வசதி இல்லாமல் சிரமப்படும் கிராமவாசிகளுக்கு முறையான வீதி வசதி ஏற்படுத்தி தருமாறு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு மணப்பெண் ஷர்மிளா கோரிக்கை வைத்துள்ளார்.

உத்தரகாண்டில் உண்டாவா கிராமம் உள்ளிட்ட பல மலை கிராமங்களில் சரியான வீதி வசதி இல்லாததால், அத்தியாவசிய தேவைக்கு கிராம மக்கள் நடந்தே செல்கின்றனர். அந்த பகுதி கிராம மக்கள் அடிப்படை தேவையான வைத்திய சிகிச்சை பெறுவதற்கும் மற்றும் கல்வி நிலையங்களுக்கு செல்வதற்கும் போதுமான வீதி வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து திருமண கோலத்தில் இளம்பெண் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி பயனர்களிடம் கவனத்தை பெற்றுள்ளது.