தமிழகத்தை உலுக்கிய 7 வயது சிறுமி விவகாரம் : இருவாரங்களாக தொடரும் தேடுதல்!!

26

தமிழகம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கிராமத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வீட்டில் தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போனார். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை பல நாட்கள் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. எனவே, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

சிபிசிஐடி பொலிஸார் கடந்த சில நாட்களாக இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். சிறுமியின் உடல் கிடைக்காததால் அவள் கொல்லப்படவில்லை என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கடந்து சில நாட்களாக சிறுமியின் தாயிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் மயக்கம் மருந்து தெளித்து சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்று அடிப்படையில் விசாரணை ரயில் நிலையங்களிலும் அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஆனாலும் இரண்டு வாரங்களாகியும் சிறுமியை பற்றி துப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் காணாமல் போன வழக்கை கூடுதலாக விசாரிக்க காஞ்சிபுரம் சிபிசிஐடி டி.எஸ்.பி வேல்முருகன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.